திருத்தணியில் 20 ஏக்கர் மாந்தோப்பில் குருபஞ்சகவியம் தெளித்ததன் அனுபவங்கள்!
திருத்தணியில் அமைந்துள்ள
ஒரு 20 ஏக்கர் மாந்தோப்பில்,
கூண்டுப் பூச்சி மற்றும்
சோனை பூச்சி
என்ற இரு முக்கிய பூச்சிகளின்
தாக்குதல் அதிகமாக இருந்தது.
இந்த தோப்பை பராமரித்து வரும்
ராஜமூர்த்தி அவர்கள்,
இதற்கு முன்பு பல்வேறு
இயற்கை முறைகளை முயற்சி செய்துள்ளார்.
🌱 முன்பு பயன்படுத்திய முறைகள்
முன்னதாக,
-
இஞ்சி
-
பச்சை மிளகாய்
-
வசம்பு
-
வேப்பிலை
போன்ற இயற்கை மூலப்பொருட்களை
அரைத்து தெளித்ததாகவும்,
இந்த 20 ஏக்கர் தோப்புக்கு
சுமார் ₹35,000 பொருட்செலவு
ஒரு முறை தெளிப்பதற்கு ஆகியுள்ளதாக கூறுகிறார்.
மூன்று முறை தெளிப்பதற்கு 1 லட்சத்திற்கு மேல் செலவு என்றும் ஆனால்,
அத்தனை செலவுகளுக்கும்
பலன் இல்லை
என்றும் அவர் பகிர்ந்தார்.
இதற்கு முன்பு
ரசாயன பூச்சிக்கொல்லிகளும்
பயன்படுத்தியுள்ளதாகவும்,
அதற்கும்
₹30,000–₹35,000 வரை (ஒருமுறை தெளிப்பதற்கு மட்டும்)
செலவாகும் என்றும் கூறினார்.
🌿 குரு பஞ்சகவ்யம் அறிமுகம்
இந்நிலையில்,
தற்செயலாக
ஒரு நண்பர் மூலம்
குரு பஞ்சகவ்யம்
குறித்து அறிந்த ராஜமூர்த்தி அவர்கள்,
அதைப் பயன்படுத்திப் பார்க்க
முடிவு செய்தார்.
இதற்காக,
திருத்தணியிலிருந்து
விழுப்புரம் வரை சென்று,
கனிமொழி அவர்களிடம் இருந்து
50 லிட்டர் குரு பஞ்சகவ்யம்
பெற்றுள்ளார்.
⚗️ குரு பஞ்சகவ்யம் பெருக்கல்
பெற்ற 50 லிட்டர்
குரு பஞ்சகவ்யத்தை
அவர் 400 லிட்டராக பெருக்கி
தயாரித்துள்ளார்.
இந்த பெருக்கல் செயல்முறைக்கு தேவையான,
கற்றாழை கிடைக்கவில்லை.
கற்றாழை கிடைக்கும் வரை
பொறுத்திருந்தால்,
பூச்சித் தாக்கம்
கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும்
என்ற அச்சத்தினால்,
👉 கற்றாழை இல்லாமல்,
-
நாட்டு சாணம்
-
கோமியம்
-
நாட்டு சக்கரை
-
கற்பூரவள்ளி
இவற்றை மட்டும் பயன்படுத்தி
குரு பஞ்சகவ்யம்
தயாரித்துள்ளார்.
🚿 தெளிப்பு விவரங்கள்
-
தெளித்த தேதி:
📅 டிசம்பர் 28 -
பயன்படுத்திய அளவு:
-
400 லிட்டர் குரு பஞ்சகவ்யம்
-
7000 லிட்டர் தண்ணீரில் கலந்து
-
முழு 20 ஏக்கர் மாந்தோப்பில்
தெளிக்கப்பட்டது
-
🎥 விளைவு – பதிவு செய்யப்பட்ட அனுபவம்
கீழே பகிரப்பட்டுள்ள
வீடியோக்கள்,
📅 ஜனவரி 11 அன்று
எடுக்கப்பட்டவை.
ரண்டாவது முறை குரு பஞ்சகவ்யம் தெளிப்பு
முதல் தெளிப்புக்குப் பிறகு,
திரும்பவும் இரண்டாவது முறையாக
400 லிட்டர் குரு பஞ்சகவ்யம் பெருக்கி,
அதை 7000 லிட்டர் தண்ணீரில் கலந்து,
📅 27 / 01 / 2026 அன்று
முழு தோப்பிலும் தெளித்துள்ளனர்.
இந்த முறை,
சோற்றுக்கற்றாழை கிடைத்திருந்தாலும்,
கற்பூரவள்ளி கிடைக்கவில்லை.
அதனால்,
கற்பூரவள்ளிக்கு மாற்றாக
கடுக்காய் வாங்கி,
அதை நன்றாக காய வைத்து,
பொடியாக்கி
குரு பஞ்சகவ்யத்தில் சேர்த்துள்ளனர்.
இந்த கலவை
மிகச் சிறப்பாக நொதித்து வந்ததாகவும்,
தெளிக்கும் நேரத்தில்
இதிலிருந்து வந்த வாசனை மிக நன்றாக இருந்ததாகவும்,
குரு பஞ்சகவ்யத்தை
நேரடியாக தெளித்தவர்கள்
தங்களுடைய அனுபவமாக பகிர்ந்துள்ளனர்.
👉 இது
குரு பஞ்சகவ்யத்தின்
உயிரியல் செயல்பாடு சரியான முறையில் நடந்தது என்பதற்கான
ஒரு நல்ல அறிகுறியாகும்.
தெளிப்புக்குப் பிறகான மாற்றங்கள் – ராஜமூர்த்தி அவர்களின் அனுபவம்
இந்த மாந்தோப்பை மேற்பார்வை செய்து வரும்
ராஜமூர்த்தி அவர்கள்,
கடந்த பல வருடங்களில்
இப்போது காண்பது போல
அதிக அளவில் பூக்களை
முன்பு பார்த்ததே இல்லை
என்று கூறுகிறார்.
குரு பஞ்சகவ்யம் தெளித்த பிறகு,
பூச்சித் தாக்கம் முழுமையாக
கட்டுக்குள் வந்துவிட்டது
என்றும் அவர் பகிர்கிறார்.
பூக்கள் உதிர்கிறதா என்று கேட்டபோது,
👉 90% பூக்கள் உதிரவில்லை என்றும்,
👉 சுமார் 5% பூக்கள் மட்டும்
சிறிதளவு கருகியுள்ளது என்றும்,
👉 மீதமுள்ள பூக்கள் அனைத்தும்
மிகச் சிறப்பான நிலையில் உள்ளன என்றும் கூறுகிறார்.
இப்போது,
கடுகு அளவிற்கு பிஞ்சு பிடிக்க ஆரம்பித்துள்ளது என்றும்,
இந்த பிஞ்சுகள் அனைத்தும்
முழு காய்களாக மாறக்கூடிய
நல்ல வாய்ப்பு உள்ளது என்று
அவர் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.
💰 செலவுக் கணக்கில் ஏற்பட்ட மாற்றம்
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது,
இந்த ஆண்டு
இயற்கை உரம் தயாரிக்க ஏற்பட்ட செலவு
மிகக் குறைவாக உள்ளது என்றும்
ராஜமூர்த்தி அவர்கள் கூறுகிறார்.
👉 இந்த வருடம் அவருக்கு ஏற்பட்ட செலவு:
-
நாட்டு சக்கரை வாங்கிய செலவு
-
கற்றாழை வாங்கிய செலவு
இதற்குப் பிறகு
வேறு எந்த பெரிய பொருட்செலவும்
இல்லை என்றும்
அவர் பகிர்ந்துள்ளார்.
🔄 மூன்றாவது முறையாக குரு பஞ்சகவ்யம் தயாரிக்கும் முயற்சி
தற்போது,
மூன்றாவது முறையாக குரு பஞ்சகவ்யம் தயாரிக்க
முழுமையான முயற்சிகளை
ராஜமூர்த்தி அவர்கள் எடுத்துவருகிறார்.
இந்த முறை,
400 லிட்டர் குரு பஞ்சகவ்யத்தை
கற்றாழை மற்றும் எருக்கம் இலைகள்
அடிப்படையாக கொண்டு
தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்காக,
50 கிலோ கற்றாழை
ஒரு இடத்தில் முன்பதிவு (order) செய்துள்ளதாகவும்,
அது வரும் வியாழக்கிழமை
வந்து சேரும் என்றும்
தகவல் தெரிவித்துள்ளார்.
பெறும் கற்றாழையை
மாவு அரைக்கும் கிரைண்டரில் போட்டு
நன்கு அரைத்து,
குரு பஞ்சகவ்யம் தயாரிப்பதற்காக
ரெடி செய்ய இருப்பதாகவும்
அவர் கூறியுள்ளார்.
🌿 பிற பயிர்களில் கிடைத்த நல்ல அனுபவங்கள்
மாந்தோப்பு மட்டுமல்லாமல்,
கீரை மற்றும் எலுமிச்சை பயிர்களிலும்
குரு பஞ்சகவ்யம் பயன்படுத்திய போது
மிக நல்ல பலன் கிடைத்ததாக
அவர் பகிர்ந்துள்ளார்.
🌱 எதிர்காலத்திற்கான தயாரிப்பு
மேலும்,
எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு,
அவர்களுடைய நிலத்திலேயே
சோற்றுக்கற்றாழை நடவு செய்து,
அதனுடன்
கற்பூரவள்ளியையும் நடவு செய்துள்ளதாக
தெரிவித்துள்ளார்.
👉 இதன் மூலம்,
இனி குரு பஞ்சகவ்யம் தயாரிப்பதற்கான
முக்கிய மூலப்பொருட்கள்
தங்களுடைய இடத்திலேயே கிடைக்கும் வகையில்
தயாராகிக் கொண்டிருக்கிறது.
📅 27 / 01 / 2026 – இன்றைய குரு பஞ்சகவ்யம் தெளிப்பு
இன்று (27 / 01 / 2026),
400 லிட்டர் குரு பஞ்சகவ்யத்தை
7000 லிட்டர் தண்ணீரில் கலந்து
முழுமையாக தெளிக்கப்பட்டது.
இந்த தெளிப்புடன் தொடர்புடைய
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்
கீழே பகிரப்பட்டுள்ளன.



Comments
Post a Comment