குரு பஞ்சகவ்யம் குறித்து விவசாயிகளின் சந்தேகங்களுக்கு – கேள்வி பதில்கள்
🌿 குரு பஞ்சகவ்யம்
(தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆய்வறிக்கை அடிப்படையில்)
கேள்வி – பதில்கள்
1. இந்த ஆய்வறிக்கை யாரால் செய்யப்பட்டது?
பதில்:
இந்த ஆய்வு
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,
பயிர் மேலாண்மை இயக்குநரகம்,
நம்மாழ்வர் கரிம வேளாண் ஆராய்ச்சி மையம்,
கோயம்புத்தூர் – 641003
ஆல் நடத்தப்பட்டு 18.12.2025 அன்று வழங்கப்பட்டது.
2. ஆய்வு செய்யப்பட்ட மாதிரி என்ன?
பதில்:
-
மாதிரி வகை: திரவம் – மஹா குரு பஞ்சகவ்யம்
-
வழங்கியவர்: ஜகத் குரு, மோகப்பேர், சென்னை
-
சோதனை முறை: ஒரு பகுதி பஞ்சகவ்யம் + இரண்டரை பகுதி நீர் கலந்து அளவீடு
👉 இது நேரடி வயல் பயன்பாட்டு செறிவு அல்ல.
3. குரு பஞ்சகவ்யம் உரமா?
பதில்:
இல்லை.
குரு பஞ்சகவ்யம் நேரடி உரம் அல்ல.
👉 இது என்ன செய்கிறது என்றால்,
மண்ணில் ஏற்கனவே இருக்கும் சத்துக்களை
கோடிக்கணக்கான நுண்ணுயிர்களைச் சேர்த்து (Billions of microorganisms – Inoculation செய்து)
நுண்ணுயிர்கள் மூலம் பயிர்கள் எளிதாக எடுத்துக்கொள்ளும் வடிவமாக மாற்றுகிறது.
👉 இதனால் ரசாயன உரம் போடாமலேயே
விளைச்சல் பெற முடிகிறது.
(செலவில்லா விவசாயம்)
4. pH மதிப்பு 3.14 என்றால் பயிர்களுக்கு ஆபத்தா?
பதில்:
இல்லை. ஆபத்து இல்லை.
ஏன்?
-
இது நீர்த்தப்பட்ட மாதிரியின் மதிப்பு
-
இது நேரடியாக வயலில் ஊற்றும் அளவு அல்ல
-
பஞ்சகவ்யம் ஒரு உயிருள்ள உயிரியல் கலவை
👉 மண்ணில் சென்றதும்:
-
மண் தானாகவே pH-ஐ சமநிலைப்படுத்தும்
-
நுண்ணுயிர்கள் அமிலத்தன்மையை மெதுவாக மாற்றும்
👉 அதனால் பயிர்களுக்கு தீங்கு ஏற்படாது.
5. மின்கடத்துத்திறன் (உப்புத்தன்மை) மதிப்பு 1.76 என்றால் உப்பு அதிகமா?
பதில்:
இல்லை. இது பாதுகாப்பான அளவு.
👉 இது பஞ்சகவ்யத்தின் உப்புத்தன்மை மட்டுமே.
👉 மண்ணின் உப்புத்தன்மை அல்ல.
👉 நடைமுறையில் இது பல மடங்கு நீர்த்துப் பயன்படுத்தப்படுவதால்,
மண்ணில் உப்பு அழுத்தம் உருவாகாது.
6. பஞ்சகவ்யத்தில் சோடியம் இருக்கிறதே? அது மண்ணுக்கு கேடு தராதா?
பதில்:
கேடு தராது.
ஏன்?
-
இது தனியாக சேர்க்கப்பட்ட ரசாயன சோடியம் அல்ல
-
கரிமப் பொருட்கள் உடன் கலந்து இருக்கிறது
-
கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுக்களுடன் சமநிலையில் உள்ளது
-
நுண்ணுயிர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது
👉 அதனால் மண்ணின் உயிரை பாதிக்காமல் செயல்படுகிறது.
7. கரிமம் – நைட்ரஜன் விகிதம் 5:1 என்றால் சரியா?
பதில்:
ஆம். திரவ நொதிப்பு கலவைக்கு இது சிறந்த விகிதம்.
👉 இதனால்:
-
நுண்ணுயிர்கள் வேகமாக செயல்படும்
-
சத்துக்கள் உடனடியாக மண்ணில் விடுவிக்கப்படும்
👉 திடக் கம்போஸ்டுக்கு வேறு விகிதம் தேவை.
👉 ஆனால் பஞ்சகவ்யம் போன்ற திரவ கலவைக்கு 5:1 சரியானது.
8. இதில் உண்மையிலேயே சத்துக்கள் உள்ளதா?
பதில்:
ஆம். ஆய்வறிக்கை உறுதி செய்கிறது.
இதில் உள்ள முக்கிய சத்துக்கள்:
-
நைட்ரஜன்
-
பாஸ்பரஸ்
-
பொட்டாசியம்
-
கால்சியம்
-
மெக்னீசியம்
-
இரும்பு
மேலும்:
-
துத்தநாகம்
-
தாமிரம்
-
மாங்கனீசு
-
போரான்
👉 இது ஒரு முழுமையான உயிரியல் ஊட்டச்சத்து கலவை.
9. கன உலோகங்கள் உள்ளதா?
பதில்:
இல்லை – பாதுகாப்பான அளவில் உள்ளது.
-
கேட்மியம்: இல்லை
-
ஈயம்: மிகக் குறைந்த அளவு
-
குரோமியம்: அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள்
👉 மனிதர், மண், பயிர் – மூன்றுக்கும் பாதுகாப்பானது.
10. புதிய மாட்டுச் சாணத்தை நேரடியாக வயலில் போடலாமா?
பதில்:
போடக்கூடாது.
ஏன்?
புதிய சாணத்தில்:
-
அதிக சூடு
-
தீவிர அமோனியா
-
பாதக கிருமிகள்
இதனால்:
-
பயிர் வேர்கள் கருகும்
-
நல்ல நுண்ணுயிர்கள் அழியும்
-
நாற்றம், ஈ, நோய் உருவாகும்
களைகள் உருவாகும்
👉 புதிய சாணத்தை மக்க வைத்த பிறகே பயன்படுத்த வேண்டும்.
11. “புதிய சாணம் போட்டால் மண் பலம் பெறும்” என்பது உண்மையா?
பதில்:
❌ இல்லை. இது தவறான நம்பிக்கை.
👉 தற்காலிகமாக பச்சையாகத் தோன்றலாம்.
👉 ஆனால் நீண்ட காலத்தில்:
-
மண் கெட்டியாகும்
-
உப்புத்தன்மை அதிகரிக்கும்
-
நோய், பூச்சி அதிகரிக்கும்
👉 மண் பலம் என்றால் உயிர் + சமநிலை.
👉 புதிய சாணம் உயிரியல் குழப்பம்.
12. பல மாடுகள் அல்லது ஆடுகளை வயலில் மேய விடுவது நல்லதா?
பதில்:
குறுகிய காலத்தில் பயன் இருப்பது போலத் தோன்றலாம்.
ஆனால் நீண்ட காலத்தில் இது மண்ணை கடுமையாக சீரழிக்கும்.
இதனால் ஏற்படும் பிரச்சினைகள்:
-
ஒரே இடத்தில் அதிக அளவு மலம் சேரும்
-
மண் இறுகி கெட்டியாகும்
-
மண்ணில் காற்றோட்டம் குறையும்
-
உப்புத்தன்மை மற்றும் அமோனியா அளவு அதிகரிக்கும்
-
மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் சமநிலை குலையும்
-
பயிர் வேர்கள் கருகும்
-
நல்ல நுண்ணுயிர்கள் அழியும்
-
நாற்றம், ஈ, நோய்கள் உருவாகும்
-
தேவையற்ற களைகள் அதிகரிக்கும்
👉 இது உரமிடல் அல்ல.
👉 இது மண்ணுக்கு ஏற்படும் உயிரியல் அழுத்தம்.
👉 இது மண்ணுக்கு அழுத்தம்.
13. குரு பஞ்சகவ்யம் இதற்கு மாற்றாக எப்படி உதவுகிறது?
பதில்:
குரு பஞ்சகவ்யம் என்பது
மாட்டிலிருந்து கிடைக்கும் மூலப்பொருட்கள்
(மாட்டு சாணம், மாட்டு மூத்திரம், மூலிகைகள்)
இவற்றை உயிரியல் முறையில் புளிக்க வைத்து,
மண்ணுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வடிவமாக மாற்றிய கலவையாகும்.
இது என்ன செய்கிறது?
-
மண்ணில் கோடிக்கணக்கான நல்ல நுண்ணுயிர்களைச் சேர்க்கிறது
-
ஏற்கனவே மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை வேகமாக செயல்படச் செய்கிறது
-
மண்ணில் உள்ள சத்துக்களை பயிர் எடுத்துக்கொள்ளும் நிலையில் திறக்கிறது
-
உப்பு, அமோனியா போன்ற தீங்கு தரும் விளைவுகள் இல்லாமல்
சமநிலையான ஊட்டச்சத்து வழங்கலை உறுதி செய்கிறது
இதனால் கிடைக்கும் நன்மைகள்:
✔ மண் உயிர் பெறுகிறது
✔ மண்ணின் கட்டு தன்மை குறைகிறது
✔ பயிரில் உடனடியாக ஆரோக்கியம் தெரிகிறது
✔ நோய் எதிர்ப்பு சக்தி உயரும்
✔ ரசாயன உரம் தேவையில்லை
✔ விவசாய செலவு கணிசமாக குறைகிறது
👉 புதிய சாணத்தை நேரடியாகப் மண்ணில் போடுவது, ரசாயன
உரம் போடுவது மண்ணுக்கும் பயிருக்கும் தீங்கு விளைவிக்கிறது.
குரு பஞ்சகவ்யம் மண்ணை குணப்படுத்துகிறது.
✔ செலவு குறைகிறது
15. குரு பஞ்சகவ்யத்தை எப்போது பயன்படுத்த வேண்டும்?
பதில்:
-
பயிர் சோர்வாக இருக்கும் போது
-
நோய் ஆரம்ப அறிகுறி தெரியும் போது
-
மண் உயிர் குறைந்த நிலங்களில்
👉 பயிர் நன்றாக இருந்தால் அதிகமாக தேவையில்லை.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
16. எல்லா மண்ணுக்கும் இது பொருந்துமா?
பதில்:
ஆம்.
✔ மணல் மண்
✔ களிமண்
✔ உப்பு மண்
✔ உயிரற்ற மண்
👉 காரணம்:
இது மண்ணை மாற்றவில்லை.
மண்ணை வேலை செய்ய வைக்கிறது.
✅ முடிவுரை
குரு பஞ்சகவ்யம்:
-
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யப்பட்டது
-
இயற்கையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
-
கன உலோகப் பிரச்சினை இல்லை
-
ரசாயன உரத்தை பயன்படுத்துவதை விட பாதுகாப்பானது
செலவில்லாதது
-
எல்லா மண் வகைகளுக்கும் ஏற்றது
👉 இது உரம் அல்ல.
👉 இது மண்ணின் உயிரை எழுப்பும் உயிரியல் செயலூக்கி.
Comments
Post a Comment